மாயமான வெளிநாட்டு பிரஜைகள்!

மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 ஆபிரிக்க பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மிரிஹான தடுப்பு முகாமில் நேற்றைய தினம் விசேட சுற்றுவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

குடிவரவு திணைக்களத்தினர் மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போதே குறித்த இடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 30 ஆபிரிக்க பிரஜைகள் காணாமல் போயுள்ளமை கண்டறிப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில் காணாமல் போயுள்ளவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உரிய ஆவணங்கள் இன்றி நாட்டில் தங்கியிருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்படும் வெளிநாட்டு பிரஜைகளே மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor