
ஹைதராபாத் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான 4 பேரும் போலீசால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த 26 வயது நிரம்பிய கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கடந்த புதன் கிழமை மாலை கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் நாடு முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹைதராபாத்தின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இந்த கொலை சம்பவம் நடந்துள்ளது.
அந்த இடத்திலேயே அந்த பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்து, அதன் பின் அந்த பெண்ணை கொலை செய்து உள்ளனர்.
அதோடு பின் சத்தனபள்ளி டோல் கேட் அருகே இருக்கும் பாலத்தின் கீழ் வைத்து எரித்து இருக்கிறார்கள்.
இந்த கொலையில் தொடர்புடைய நான்கு பேரையும் போலீசார் அதன்பின் 24 மணி நேரத்தில் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.
கொலையாளிகளான முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அந்த பெண்ணை மிகவும் மோசமாக கொடுமைப்படுத்தி கொலை செய்துள்ளனர் எனவும், அவரின் வாயில் மதுவை ஊற்றி கொடுத்துவிட்டு, பின் தலையில் கல்லால் அடித்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து 27 கிமீ அவரின் உடலை லாரியில் வைத்து கொண்டு சென்று பின் எரித்துள்ளனர் என்பதனை பொலிஸார் கண்டறிந்தனர்.
இந்நிலையில் , குற்றம் நடந்த இடத்திற்கு 4 பேரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது 4 பேரும் தப்பிசெல்ல முயற்சி செய்துள்ளனர்.
இதனால் பாதுகாப்பு கருதி அவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட போது, நால்வரும் உயிரிழந்ததாக போலீஸ் அறிவித்துள்ளது .