கிளிநொச்சியில் கடும் மழை – வெள்ள அபாயம்.

கிளிநொச்சி மாவட்டத்தில் பல பகுதிகளில் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் மக்களைப் பாதுகாப்பான இடங்களை  இடம்பெயருமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், இரணைமடுக் குளத்துக்கு மணிக்கு 2 அங்குலம் நீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் அதன் நீர் மட்டம் இன்று காலை 30 கன அடியைத் தாண்டும் என நீர்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனால் இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் எந்நேரத்திலும் திறக்கப்படலாம் என்றும் தாழ்நிலப்பகுதி மக்களை முன்னாயத்தமாக இருக்குமாறும் கேட்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து பெய்து வரும் கன மழையினால், உருத்திரபுரம், இரத்தினபுரம், ஆனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் மக்களின் குடியிருப்புக்கள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

அதனால் அந்தப் பகுதி மக்கள் இடம்பெயர்ந்து கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இப்பகுதியில் மீட்டுப்பணிக்காக இளைஞர்களும், படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்