புத்தளத்தில் வெள்ளம் – 3842 பேர் பாதிப்பு.

சீரற்ற வானிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் புத்தளம், முந்தல், கல்பிட்டி, வண்ணாத்திவில்லு, நவகத்தேகம, சிலாபம் மற்றும் மகாகும்புக்கடவல ஏழு பிரதேச செயலாளர் பிரிவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதனால் 1200 குடும்பங்களைச் சேர்ந்த 3842 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதில் கல்பிட்டி பிரதேச செயலகப் பிரிவில் 775 குடும்பங்களைச் சேர்ந்த 2390 பேரும் முந்தல் பிரதேச பிரிவில் 193 குடும்பங்களைச் சேர்ந்த 710 பேரும், புத்தளம் பிரதேச செலயலகப் பிரிவில் 86 குடும்பங்களைச் சேர்ந்த 257 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் நவகத்தேகம பிரதேச செலயலகப் பிரிவில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 152 பேரும் வண்ணாத்திவில்லு பிரதேச செலயலகப் பிரிவில் 77 குடும்பங்களைச் சேர்ந்த 274 பேரும் மகாகும்புக்கடவல பிரதேச செலயலகப் பிரிவில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 51 பேரும் மற்றும் சிலாபம் பிரதேச செலயலகப் பிரிவில் 02 குடும்பங்களைச் சேர்ந்த 08 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை கல்பிட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள 40 குடும்பங்களைச் சேர்ந்த 155 பேர் இரு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டு வருகின்றது.

 


Recommended For You

About the Author: ஈழவன்