வெளியாகின்றது இலங்கையின் புதிய வீதி வரைபடம்!

இலங்கையின் புதுப்பிக்கப்பட்ட வீதி வரைபடம் இந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நில அளவை பணிப்பாளர் நாயகம் கே.ஆர்.எஸ் சங்கக்கார இன்று (வியாழக்கிழமை) இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் புதிய வீதி வரைபடத்தில் அதிவேக நெடுஞ்சாலைகள் மற்றும் பிற வசதியான தகவல்கள் இருக்கும் என்றும் அவர் கூறினார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே நாட்டின் வீதி வரைபடம் கடைசியாக புதுப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor