ஓரினச்சேர்க்கையாளர் மீது தாக்குதல்! – இளைஞனுக்கு சிறை..!!

ஓரினச்சேர்க்கை ஜோடிகள் மீது தாக்குதல் நடத்திய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சென்-செந்தனியின் Pierrefitte நகரில் வைத்து இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். . கடந்த சனிக்கிழமை Pierrefitte-sur-Seine நகரில் ஓரினச்சேர்க்கை ஜோடிகளான 19 மற்றும் 22 வயதுடைய இளைஞர்கள் ஆடைகள் வாங்கிக்கொண்டிருந்த போது, அவர்களை சில நபர்கள் தாக்கியுள்ளனர்.
இரும்பு கம்பிகள் மற்றும் கட்டைகள் கொண்டு அவர்கள் இருவரையும் மிக மோசமாக தாக்கியிருந்தனர். தவிர, கொலை அச்சுறுத்தலும் விடுத்துள்ளனர்.
இந்த தாக்குதலை திட்டமிட்டு முன் நின்று நடத்திய 19 வயதுடைய இளைஞனை Pierrefitte நகரில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். தாக்குதல் நடத்திய நபரும் தாக்குதலுக்கு இலக்கான நபரும் உறவினர்கள் என அறிய முடிகிறது.
கைது செய்யப்பட்ட இளைஞனுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor