திங்கள் வரை நீடிக்கும் போராட்டம்..!

இன்று வியாழக்கிழமை நாடு முழுவதும் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் இந்த போராட்டம் திங்கட்கிழமை வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

RATP ஊழியர்கள் திங்கட்கிழமை வரை தொடர் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என தொழிற்சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இன்று போல் (வியாழக்கிழமை ) வரும் திங்கட்கிழமை வரை கடுமையான போராட்டம் தொடரும் Unsa தொழிற்சங்கத்தின் தலைவர் Thierry Babec தெரிவித்துள்ளார்.

RATP சேவைகளின் பிரதான் ஊழியர்கள் Unsa தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது கவனிக்கத்தக்கது. இந்த புதிய அறிவிப்போடு CGT தொழிற்சங்கமும் இணைந்துகொண்டால், திங்கட்கிழமை வரை பாரிய போக்குவரத்து தடை ஏற்படும் என அஞ்சப்படுகின்றது.


Recommended For You

About the Author: Editor