மின் விசிறிகளை ஏற்க மறுத்த பாடசாலை நிர்வாகம்!!

நாட்டில் நிலவி வரும் அதீத வெப்பம் காரணமாக, பாடசாலை மாணவி ஒருவரின் தந்தை, பாடசாலைக்கு மின் விசிறிகள் வழங்கியுள்ளார். ஆனால் அந்த அன்பளிப்பு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்த சுவாரஷ்ய சம்பவம் Orly இல் இடம்பெற்றுள்ளது. Philippe Bouriachi எனும் நபர் தனது மகள் கல்வி கற்கும் பாடசாலைக்குச் சென்றிருந்த போது, மிக மோசமான வெப்பம் நிலவியதோடு, இதனால் மாணவர்கள் அசெளகரியங்களுக்கு உள்ளாகுவதை பார்த்த அவர், பாடசாலைக்கு மின் விசிறிகள் வழங்க தீர்மானித்தார்.

பின்னர் மறுநாள் 10 மின் விசிறிகளுடன் பாடசாலைக்குச் சென்று, அதனை நிர்வாகிகளிடம் அன்பளிப்பாக வழங்கியுள்ளார். அப்போது அந்த மின் விசிறிகள் பொருத்தப்பட்டாலும், மறுநாள் அவை அகற்றப்பட்டன.

பாதுகாப்பு காரணங்களுக்கவும், நெறிமுறை விதிகளை மீறி இருந்ததாலும், இந்த மின் விசிறிகள் பாடசாலையில் இருந்து அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, பாடசாலை நிர்வாகம், வெப்பத்தை தணிக்க மாணவர்களுக்கு தண்ணீர் விளையாட்டுக்களுக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.


Recommended For You

About the Author: Editor