ஆபத்தின் விளிம்பில் 25,000 மேம்பாலங்கள்!

பிரான்சில் உள்ள 25,000 மேம்பாலங்கள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக செனட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

பிரான்சில் மொத்தமாக 200,000 இல் இருந்து 250,000 சிறிய மற்றும் பெரிய மேம்பாலங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பாதுகாப்பு உள்ளூர் (நகரசபை, மாவட்டம்) அதிகாரிகளின் பொறுப்பில் உள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஓகஸ்டில் இத்தாலியில் உள்ள Genoa மேம்பாலம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, பிரான்சில் உள்ள மேம்பாலங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதைத் தொடர்ந்து, தற்போது பிரான்சில் இருக்கும் 25,000 மேம்பாலங்கள் பயன்படுத்த தகுதியற்றது/ உடையும் தருவாயில் உள்ளது என இன்று வியாழக்கிழமை செனட் சபை உறுப்பினர் Hervé Maurey (UC) தெரிவித்துள்ளார்.

மேம்பாலங்கள் தொடர்பான பராமரிப்பு, ஆராய்ச்சிகளுக்காக மிக அதிகமாக செலவு செய்யப்படுவதாகவும், வருடத்துக்கு 40 மில்லியன் யூரோக்களாக இருந்த இந்த தொகை தற்போது வருடத்துக்கு 120 மில்லியன் யூரோக்களாக அதிகரித்துள்ளதாகவும் Hervé Maurey மேலும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நமக்கு அவசரகால திட்டம் ஒன்றும் தேவை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்


Recommended For You

About the Author: Editor