
நேபாளத்தில் இடம்பெற்றுவரும் 13ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் போட்டிகளில் பத்தாயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் குமார் சண்முகேஸ்வரன் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
கடும் குளிருக்கு மத்தியில் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை வீரர் குமார் சண்முகேஸ்வரன் பந்தயத் தூரத்தை 30 நிமிடம் 49.20 செக்கன்களில் ஓடி முடித்து வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
ஹட்டன் புதுக்காட்டைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன், தான் பங்கேற்ற முதலாவது சர்வதேச போட்டியிலேயே பதக்கம் வென்று சாதித்துள்ளார்.
இதில் தங்கத்தை இந்தியாவும், வெண்கலத்தை நேபாளமும் வென்றிருந்தன.