கரை ஒதுங்கிய 20 டன் எடையிலான திமிங்கலத்தில் 100 கிலோ குப்பை!

ஸ்காட்லாந்தில் இறந்து கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றிலிருந்து, 100 கிலோ அளவிளான குப்பைகள் எடுக்கப்பட்டுள்ளது.

ஹாரிஸ் கடற்கரை பகுதியில் கடந்த வாரம் வியாழனன்று, இறந்து கரை ஒதுங்கிய 20 டன் எடையிலான திமிங்கலத்தின் உடலை மருத்துவர்கள் பரிசோதித்தனர்.

அப்போது அதன் வயிற்றிலிருந்து கயிறுகள், மீன் வலைகள், பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கையுறைகள் போன்றவை 100 கிலோ அளவில் அகற்றப்பட்டுள்ளன.

இந்த குப்பைகளால் ஏற்பட்ட செரிமான கோளாறு காரணமாகவே திமிங்கலம் இறந்திருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor