பரிசை பாதுகாக்க 6,000 படையினர் குவிப்பு..

டிசம்பர் 5 ஆம் திகதி இடம்பெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் இருந்து பரிசை பாதுகாக்க 6,000 படையினர் தயாராக உள்ளனர்.

காவல்துறையினர் மற்றும் ஜோந்தாமினர் என மொத்தம் 6,000 அதிகாரிகள் பரிஸ் முழுவதும் பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர். 52 குழுக்களாக பிரிந்து இவர்கள் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பில் ஈடுபட உள்ளதாக அறிய முடிகிறது.

இவர்களில் 3,600 CRS அதிகாரிகள் மற்றும் ஜோந்தாமினர்கள் உள்ளடங்குகின்றனர். தவிர குற்றவியல் தடுப்பு பிரிவினர் (BAC), பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் (CSI) ஆகிய அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.

வன்முறை பல இடங்களில் வெடிக்கலாம் என அஞ்சப்படுவதால், பல இடங்களில் உள்நுழைய தடையும் விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவனியூ தூ சோம்ப்ஸ்-எலிசே (Avenue des Champs-Elysees) பகுதிக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor