நவம்பர் 13 தாக்குதல்! – சந்தேக நபர் 4 வருடத்தின் பின் கைது!!

நவம்பர் 13 தாக்குதல் இடம்பெற்று நான்கு வருடங்கள் ஆன நிலையில், ஜெர்மனியில் வைத்து சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Bosnia நாட்டு குடியுரிமை கொண்ட குறித்த நபர், கடந்த வாரம் ஜெர்மனியில் வைத்து கைது செய்யப்பட்டதாக இன்று வியாழக்கிழமை தகவல் வெளியாகியுள்ளது.

39 வயதுடைய குறித்த நபர் கடந்த ஜூன் 19 ஆம் திகதி இரவு கைதானதாக அறியமுடிகிறது.

நவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பெல்ஜிய பயங்கரவாதிகள் பரிஸ் மற்றும் அதன் புறநகர்களில் மேற்கொண்ட தாக்குதலில் 131 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

பிரெஞ்சு அதிகாரிகளுடன் சேர்ந்து பெல்ஜிய அதிகாரிகளும் இது தொடர்பான விசாரணைகளை தொடர்ச்சியாக மேற்கொண்டிருந்தனர்.

பின்னர் பெல்ஜிய அதிகாரிகள் வழங்கிய தகவல்களின் பேரில், குறித்த Bosnia நாட்டு குடியுரிமை கொண்ட நபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor