வைத்தியசாலைக்குள் துணிகர திருட்டு!

யாழ்.போதனா வைத்தியசாலை பணியாளர் ஒருவரின் சங்கிலியை வைத்தியசாலைக்குள் வைத்து அறுத்த திருடன் மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பணியாளா் பணிக்காக வைத்தியசாலைக்குள் நுழைந்து கொண்டிருந்தபோது அங்கு நோயாளிபோல் இருந்த திருடன் திடீரென சங்கிலியை அறுத்துக் கொண்டு ஓடியுள்ளான்.

இதனை அவதானித்த வைத்தியசாலை ஊழியா்கள் மற்றும் வாகன சாரதிகள் திருடனை துரத்திச் சென்று மடக்கி பிடித்துள்ளனா்.

பிடிபட்டவுடன் திருடன் அறுத்த சங்கிலியை வீச முயற்சித்தபோது சங்கிலி பத்திரமாக மீட்கப்பட்டது.

இந்நிலையில் , திருடன் நையப்புடைக்கப்பட்ட பின்னா் எச்சாிக்கை செய்து விடுவிக்கப்பட்ட்டதாகவும் தெரியவருகின்றது.


Recommended For You

About the Author: Editor