சுந்தர் பிச்சை அல்ஃபபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்பு!!

கூகிள் தேடுபொறி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை (வயது 47) அல்ஃபபெட் (Alphabet) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட Alphabet இன் துணை நிறுவனங்களில் Google லும் ஒன்றாகும்.

அதனை ஆரம்பித்து வைத்தவர்களில் ஒருவரான லேரி பேஜ் (Larry Page) இதுவரை அல்ஃபபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பணியாற்றி வந்தார்.

லேரியும், கூகிளின் மற்றுமொரு நிறுவனருமான சர்கே பிரின்னும் (Sergey Brin) தொடர்ந்து அல்ஃபபெட்டிக் பங்குதாரர்களாக செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்ஃபபெட்டின் இயக்குநர் சபையிலும் அவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நம்பிக்கை மோசடி விசாரணைகள், தனிப்பட்ட தகவல்களைக் கையாளும் விதம் ஆகியன தொடர்பில் கூகிள் சர்வதேச அளவில் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், அதன் தலைமை நிர்வாகியான சுந்தர் பிச்சை பிறிதொரு பதவியை ஏற்றுக் கொள்ளவுள்ளார்.

பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களைக் கையாள கூகிள் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் அதன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Editor