ட்ரம்புக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் உள்ளன – விசாரணை குழு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு எதிரான குற்றப் பிரேரணைக்கு போதுமான ஆதாரங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ட்ரம்பிற்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்து வரும் விசாரணை குழு இதனைக் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனிப்பட்ட நலன் சார்ந்து செயற்பட்டுள்ளதாகவும் அந்த விசாரணை குழு கூறியுள்ளது.

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தலுக்கு, உக்ரேனின் உதவியைப் பெற்று, நாட்டுக்கு சர்வதேச தலையீட்டைக் கொண்டுவர முயற்சிப்பதாக ட்ரம்ப் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுக்களை ட்ரம்ப் தொடர்ச்சியாக மறுத்து வருகின்றார்.

அத்துடன், விசாரணைகளுக்காக தாம் முன்னிலையாகப் போவதில்லை எனவும் ட்ரம்ப் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor