டிக் டொக் செயலி ஊடாக தகவல்கள் திருடப்படுகின்றன ?

சீன நிறுவனமொன்றை மையமாக கொண்டு இயங்கும் டிக் டொக் செயலி தன்னுடைய பயனாளர்களின் பெரும்பாலான தகவல்களைச் சீனாவிடம் வழங்குவதாக என அமெரிக்காவில் வழக்கொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனம் பயனாளர்களின் அனுமதியின்றி ரகசியமாகத் தகவல்களை பெறுவதாக அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பைட்டான்ஸ் என்ற சீன நிறுவனத்தைத் தாய் நிறுவனமாகக் கொண்ட டிக் டொக் அமெரிக்காவில் பல மில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ளது.

உலகளாவிய ரீதியாக அரை பில்லியன் பயனாளர்களைக் கொண்ட டிக் டொக் செயலி ஏற்கனவே அமெரிக்கர்களின் தகவல்களைச் சீன சர்வர்களில் சேகரித்து வைத்திருப்பதை மறுத்துள்ளது.

இந்த செயலியின் தகவல் சேகரிப்பு மற்றும் தணிக்கை முறையைக் கொண்டு வட அமெரிக்காவில் பல்வேறு அழுத்தங்களைச் சந்தித்து வருகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்