சூடானில் தீ விபத்து – 23 பேர் உயிரிழப்பு.

சூடான் தலைநகர் கார்ட்டூமில் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி மற்றும் தீ விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 130 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சலோமி செரமிக் தொழிற்சாலையில் நேற்று (புதன்கிழமை) இரவு ஏற்பட்ட திடீரென ஏற்பட்ட இந்த விபத்தில் ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கார்ட்டூம், வடக்கு கார்ட்டூம் மற்றும் ஓம்துர்மன் நகரங்களில் உள்ள ஐந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செரமிக் ரைல்ஸ் உற்பத்தி நிலையப் பணிகளுக்காக, எரிபொருள் நிரப்பப்பட்ட தாங்கியிலிருந்து எரிவாயுவை எடுக்கும் போது திடீரென தாங்கி வெடித்தது. இதனால் எரிபொருள் வாயு, பீங்கான் தொழிற்சாலையின் பிற பகுதிகளைத் தாக்கியதால் தொழிற்சாலை தீப்பிடித்து எரிந்தது.

இந்நிலையில், நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் இருந்த நிலையில் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். எனினும் தீ விபத்தில் சிக்கி 23 பேர் உயிரிழந்தனர்.


Recommended For You

About the Author: ஈழவன்