‘பொதுசன தொடர்புகள்’ என்ற பெயரில் புதிய பிரிவு.

பிரதமர் அலுவலகத்தில் ‘பொதுசன தொடர்புகள்’ என்ற பெயரில் புதிய பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று(செவ்வாய்கிழமை) இந்த பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

மக்களின் பிரச்சினைகளை சேகரித்து, உரிய நிறுவனங்களின் கவனத்திற்கு எடுத்து செல்வதே இதன் பிரதான நோக்கமாகும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் முறைப்பாடுகளை உரிய நிறுவனங்களுக்கு கையளித்தததன் பின்னர், அது குறித்து பரிசீலனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்