மண்சரிவுகளை குறைக்கும் முயற்சிகளுக்கு அமெரிக்கா ஒத்துழைப்பு.

இலங்கையில் மண்சரிவுகளை குறைக்கும் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தினால் நேற்று(செவ்வாய்கிழமை) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை – நிக்கஹ பகுதியில் மண்சரிவு முகாமைத்துவம் தொடர்பாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வு பிரிவிற்கு கண்காணிப்பு உபகரணமொன்றை பரிசளித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி நிறுவகத்தின் பொறியியலாளர் மற்றும் புவியியல் நிபுணர்கள் கடந்த நவம்பர் மாதம் 5 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்து மண்சரிவு ஆராய்ச்சி உபகரணங்களை நாட்டில் நிறுவ நடவடிக்கை எடுத்ததாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், மண்சரிவு தொடர்பான வரைபடத்தின் தரத்தை மேம்படுத்தல், அனர்த்தங்களுக்கு பதிலளிப்பதில் விஞ்ஞானிகளின் பங்களிப்பு ஆகியவை குறித்தும் அமெரிக்க புவிவியல் ஆராய்ச்சி நிறுவகத்தின் அதிகாரிகள் தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் அதிகாரிகளை தெளிவுபடுத்தியுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்