க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் கலந்துரையாடல்கள் தீவிரம் !

வடபகுதியில் தாங்கள் தான் உண்மையான மாற்று அணியென தமிழ் தேசிய மக்கள் முன்னணி முரண்டுபிடிக்க வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான க.வி.விக்னேஸ்வரன் தலைமையில் மாற்று அணி ஒன்றை உருவாக்குவதற்கான கலந்துரையாடல்கள் தீவிரம் பெற்றுள்ளன.

வடக்கு கிழக்கு மாவட்டங்களை சேர்ந்த புத்திஜீவிகளும் சிவில் சமூக பிரமுகர்களும் கட்சி தலைவர்களும் கடந்த சனிக்கிழமை முதல் விக்னேஸ்வரனுடன் பலமான மாற்று அணி ஒன்றினை அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நல்லூர் கோவில் வீதியிலுள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் இன்று செவ்வாய்க்கிழமையும் மன்னார், முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகியவற்றை சேர்ந்த பொது அமைப்புக்களின் பிரமுகர்கள் விரிவான கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.


Recommended For You

About the Author: Editor