புதிய வசதிகளுடன் 9 ஆம் இலக்க ட்ராம்! – புகைப்படங்கள் உள்ளே…!!

2020 ஆம் ஆண்டு சேவைக்கு வர உள்ள புதிய ஒன்பதாம் இலக்க ட்ராம் தொடருந்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Orly நகரில் உள்ள வேலைத்தள திருத்தகத்துக்கு இந்த புதிய தொடருந்துகள் கொண்டுவரப்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு செப்டம்பரில் இந்த புதிய தொடருந்துகள் சேவைக்கு வரும். அதுவரை குறித்த ஓர்லி வேலைத்தளத்தில் இருந்து Christopher Columbus  (Choisy-le-Roi) நிலையம் வரை சோதனை ஓட்டத்துக்காக இயக்கப்படும்.
குறித்த 9 ஆம் இலக்க ட்ராம் பரிஸ் 13 ஆம் வட்டாரத்தின் Porte de Choisy நிலையத்தில் இருந்து Ivry-sur-Seine, Vitry-sur-Seine, Choisy-le-Roi, Thiais, Orly ஆகிய நகரங்களை கடந்து மத்திய ஓர்லி (Val-de-Marne) நகர் வரை சென்றடைகின்றது.
45 மீற்றர் நீளம் கொண்ட இந்த தொடருந்து  314 பயணிகளை சுமந்து செல்லும் எனவும்,  32 USB மின்னேற்றும் பகுதி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாதம் ஒன்றுக்குக்கு இரண்டில் இருந்து மூன்று தொடருந்துகள் தயாரிக்கப்படும் என அறிய முடிகிறது.
தவிர, குறித்த தொடருந்து முழுக்க முழுக்க LED மின் விளக்குகளால் ஆனது. வெளியே உள்ள வெளிச்சத்தை கருத்தில் கொண்டு அதற்கேற்றால் போல் ஒளியை வெளியிடும் திறன் கொண்டதாகவும், மிக குறைவான மின்சாரத்தையே இது எடுத்துக்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor