ரஷ்யா மற்றும் சீனாவுக்கு இடையே இயற்கை எரிவாயு குழாய்.

ரஷ்யா மற்றும் சீனாவுக்கு இடையே இயற்கை எரிவாயு குழாய் ஒன்றை கொண்டு செல்லும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டமானது நேற்று (திங்கட்கிழமை) ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் மற்றும் சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங் ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.

இந்த குழாய், சைபீரிய எரிவாயு வயலை வடகிழக்கு சீனாவில் உள்ள ஒரு நகரத்துடன் இணைக்கிறது.

சீனாவின் தேசிய பெட்ரோலியம் கோர்ப் நிறுவனம், 2014ஆம் ஆண்டு மே மாதத்தில் ரஷ்ய எரிசக்தி நிறுவனமான காஸ்ப்ரோமுடன் 400 பில்லியன் டொலர்கள் மதிப்புள்ள ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இதன் பின்னர், குழாயின் ஆரம்ப கட்டம் வெறும் ஐந்து ஆண்டுகளில் கட்டப்பட்டு தற்போது, திறந்தும் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சீன ஜனாதிபதி ஸி ஜின் பிங் கூறுகையில், ‘சீனாவும் ரஷ்யாவும் தங்கள் தேசிய வளர்ச்சியில் ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளன, எங்கள் உறவுகளும் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைகின்றன’ என கூறினார்.


Recommended For You

About the Author: ஈழவன்