விஷவாயு தாக்கி கோவையில் மூவர் உயிரிழப்பு!

கோவை கொண்டயம்பாளையம் பகுதியில் சுத்தம் செய்யும் பணியாளர்கள் மூன்று பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர்.

லட்சுமி கார்டன் பகுதியில் சுப்பிரமணியன் என்பவரின் வீட்டில் உள்ள கழிவு குழியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்ட போதே, குறித்த மூவரும் உயிரிழந்துள்ளனர்.

ஒருவர் விஷவாயு தாக்கத்திற்கு உள்ளாகிய நிலையில் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஏனைய இருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்களின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை அண்மையில் குஜராத் மாநிலத்தில் விஷவாயு தாக்கி ஏழு பேர் உயிரிழந்திருந்தனர்.

அண்மைக்காலமாக விஷவாயு தாக்கி உயிரிழக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுத்தம் செய்யும் வேலையில் ஈடுபடும் தொழிலாளர்கள், பணிபுரியும் போது பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் எனப் பலமுறை சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினாலும், ஆங்காங்கே போதிய பாதுகாப்பு வசதிகள் இன்றிய நிலையில் இவ்வாறான உயிரிழப்புகள் ஏற்படுவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor