தண்டவாளத்திற்கு அருகில் மிதிவெடி – ரெயினை கவிழ்க்க முயற்சியா ?

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் உள்ள தொடருந்துக் கடவைக்கு அருகாமையில் உயிர்ப்புள்ள மிதிவெடி ஒன்று யாழ்ப்பாணம் பொலிஸாரால் மீட்கப்பட்டது.

இன்று காலை  மிதிவெடி ஒன்று இருப்பதாக பொது மக்களினால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் பொலிஸார் அதனை மீட்டனர்.

அந்த பகுதியில் குப்பைகள் போடப்பட்டிருந்தன. அதற்கு மத்தியில் இருந்தே குறித்த மிதிவெடி மீட்கப்பட்டுள்ளது.

 

எவ்வாறு இந்த பகுதியில் மிதிவெடி வந்ததென்பது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகிறது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அதேவேளை கடந்த வாரம் மல்லாகம் பகுதியில் புகையிரத தண்டவாளத்தையும் சிலிப்பர் கட்டைகளையும் இணைத்து பொருத்தப்பட்ட சுமார் 20 கிளிப்புக்கள் கழட்டப்பட்டிருந்தன. குறித்த செயற்பாடு புகையிரத்தை கவிழ்ப்பதற்கான முயற்சியா எனும்  கோணத்தில் தெல்லிப்பளை பொலிஸார் முன்னெடுத்து வரும் நிலையில் இன்றைய தினம் தண்டவாளத்திற்கு அருகில் இருந்து மிதிவெடி மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: ஈழவன்