எல்ல பகுதியில் வான் விபத்து – 9 பேர் படுகாயம்.

ஊவா மாகாணத்தின் எல்ல பகுதியில் வான் ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த விபத்தில் அதில் பயணம்செய்த ஒன்பது பேர் படுகாயங்களுக்குள்ளாகி பதுளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பண்டாரவளை பகுதியிலிருந்து கல்முனை பகுதியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த குறித்த வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வாகன சாரதிக்கு வாகனத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்