அணுக்கழிவுகளை சேமிப்பதால் பாதிப்பில்லை – மத்திய அரசு!!

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உருவாகும் அணுக்கழிவுகளை சேமிப்பதால் எவ்வித பாதிப்பும் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துபூர்வமாக இந்த பதிலை தெரிவித்துள்ளார்.

மேலும் கூடங்குளத்தில் அணுக்கழிவு மேலாண்மை அமைப்பு கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து செயற்பட்டு வருவதாக தெரிவித்த அவர், இந்த கழிவுகள் சரியான முறையில் பதப்படுத்தப்பட்டு பின்னர் பாதுகாப்பான முறையில் சேமிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் குறித்த பகுதியில் கதிர்வீச்சி எந்தளவிற்கு காணப்படுகின்றது என்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆகவே குறித்த பகுதியில் அணுக்கழிவுகளை சேமிப்பதால் எவ்வித பாதிப்பும் இல்லை என அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

அணுக்கழிவுகளை சேமிப்பதால் எவ்வித பாதிப்பும் இல்லை என்ற மத்திய அரசின் கருத்திற்கு தமிழகத்தின் பல கட்சிகள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor