வாழ்த்து பதாகையை அகற்ற உத்தரவிட்ட ஜனாதிபதி.

கட்டுநாயக்க பகுதியில் அமைக்கப்பட்டிருந்த பதாதை ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய அகற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து அமைக்கப்பட்டிருந்த குறித்த பதாதையே நேற்று (திங்கட்கிழமை) இவ்வாறு அகற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நுழையும் பகுதியில் பதாதையொன்று அமைக்கப்பட்டிருந்தது.

இந்திய விஜயத்தினை முடித்துக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டை வந்தடைந்த ஜனாதிபதி இந்த பதாதையை அவதானித்துள்ளார்.

இதனையடுத்து குறித்த பதாதையை அகற்றுமாறு ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்