தண்ணீர் இணைப்பை துண்டித்த ஆனோல்டின் இணைப்பாளர்!!

யாழ்ப்பாண மாநகர மேயா் ஆனோல்ட்டின் இணைப்பாளா் இமானுவேல் தயாளன் என்பவா் தனது தனிப்பட்ட பிரச்சனை ஒன்றுக்காக குருநகரைச் சோ்ந்த பெண்தலைமைத்துவ குடும்பத்திற்கு வழங்கப்பட்டிருந்த தண்ணீா் இணைப்பை துண்டித்துள்ளாா்.

அந்த தண்ணீா் இணைப்பானது அவ் ஒழுங்கையில் வசிக்கும் 10 பேர் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொண்டதாகும்.

குறித்த அந்த பெண் தலைமைத்துவக்குடும்பமானது இடியப்பம் அவித்து கடைகளுக்கு வழங்கி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை நம்பியே வாழ்ந்து வருகிறது.

அந்நிலையில் தனது தனிப்பட்ட பிரச்சனையின் காரணமாக பழிவாங்கும் எண்ணத்தில் அவா்களின் வாழ்வாதாரத்தை சிதைப்பதற்காக யாழ் மாநக மேயிரன் இணைப்பாளா் தயாளன் பொது சுகாதார பரிசோதகா்களை குறித்த பெண் தலைமைத்துவ குடும்ப வீட்டுக்கு அனுப்பி மிரட்டியுள்ளாா்.

அதன் பின்னா் யாழ் மாநகர ஊழியா்களைக் கொண்டு தண்ணீர் இணைப்பையும் துண்டித்துள்ளாா். அதனால் கடந்த இரு நாட்களாக தண்ணீர் கிடைக்காமல் வாழ்வாதாரம் இன்றி அந்த குடும்பம் மிகுந்த கஸ்டத்தில் இருக்கிறாா்கள்.

நான் ரவுடி என்னைப்பாா்த்து ஊரே பயப்படுகிறது என்றும் குறித்த 4 பிள்ளைகளின் தாயையும் யாழ் மாநகர மேயரின் இணைப்பாளா் மிரட்டியுள்ளதுடன் அநாகரீக வாா்த்தைகளையும் பிரயோகித்துள்ளாா்.

Recommended For You

About the Author: Editor