
யாழ். மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது யாழில் பல்வேறு பிரதேசங்களில் டெங்கு பரவும் சூழல் இனங்காணப்பட்டு அவற்றை அழிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திங்கட்கிழமை வலி. கிழக்கு பிரதேச சபையினரும் அச்சுவேலி பொலிஸாரும் இணைந்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது டெங்கு நுளம்பு பரவக்கூடிய சூழல் இனங்காணப்பட்டு அவற்றை அழிக்கும் நடவடிக்கையில் அச்சுவேலி பொலிஸ் நிலைய சுற்றுச்சூழல் பொலிஸார் ஈடுபட்டிருந்தனர்.