பிலிப்பைன்ஸில் கடலில் மூழ்கி வரும் கிராமம்.

கடல்நீர் மட்டம் அதிகரிப்பால், பிலிப்பைன்ஸில் உள்ள சிடியோ பரிஹான் கிராமம், கடலில் மெல்ல மெல்ல மூழ்கி வருவதாக அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளது.

இதன்படி, புவி வெப்பமயமாதல் பிரச்சினையால் கடல்நீர் மட்டம் அதிகரித்து வருவதால், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4 சென்டிமீட்டர் அளவிற்கு இந்த கிராமம் கடலில் மூழ்கி கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கிராமத்தில் உள்ள மக்கள் அனைவரும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்கள் என்பதால் வேறு எங்கும் செல்ல முடியாமல் இன்னல்களுக்கு மத்தியில் அங்கேயே வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, அவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள, கடலின் நீர்மட்டத்தின் உயரம் அதிகரிக்க அதிகரிக்க கிராம மக்கள் மூங்கில்களை கொண்டு வீட்டின் உயரத்தை உயர்த்தி வருகின்றனர்.

மணிலாவில் இருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள சிடியோ பரிஹான் கிராமம், ஒரு காலத்தில் தீவாக இருந்து தற்போது நிலப்பரப்பே கண்ணில் படாத வகையில் கடலில் மிதக்கும் கிராமமாக மாறியிருக்கிறது.

இந்த விடயம் தற்போது சர்வதேசமே உற்றுநோக்கும் விடயமாக மாறியிருப்பதால், இதற்கு நிரந்தர தீர்வொன்றை பெற்றுதருமாறு அக்கிராம மக்கள் வேண்டுக்கோள் விடுக்கின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்