சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் பரீட்சை எழுதும் மாணவர்கள்.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் நாடளாவிய ரீதியில் கா.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் இடம்பெற்று வருகின்றன.

வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பகுதிகளில் மாணவர்கள் ஆர்வத்துடன் பரீட்சைக்கு சென்று பரீட்சை எழுதினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழைபெய்து வரும் நிலையிலும் பட்டிருப்பு, மட்டக்களப்பு, கல்குடா, மட்டக்களப்பு மேற்கு, மட்டக்களப்பு மத்தி கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளுக்கு  மாணவர்கள் பரீட்சைகளுக்கு தோற்றுவதற்கு சென்றனர்.

அதேபோல மலையகத்திலும் ஹட்டன், கொட்டகலை பாடசாலை மாணவர்கள் மழைக்கு மத்தியிலும் பரீட்சைக்கு தோற்றினர்.


Recommended For You

About the Author: ஈழவன்