
வடக்கில் சட்டத்தையும் ஒழுங்கையும் நடைமுறைப்படுத்துவதற்கு மக்களை போலீசாருடன் இணைந்து செயற்பட வருமாறு யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக புதிதாக இன்றைய தினம் தனது கடமைகளை ஆரம்பித்த மகேஷ் ரத்நாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது,
வடக்கில் இன்றைய தினம் பிரதிப் பொலிஸ்மா அதிபராக எனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளேன் வடக்கில் சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்த என்னாலான முயற்சிகளை முன்னெடுக்க உள்ளேன் அத்தோடு பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையிலான நல்லுறவை ஏற்படுத்துவதற்கு நான் முழுமையாக முயற்சிப்பேன்.
அத்தோடு வடக்கில் பணியாற்றும் போலீசாருக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பிலும் நான் பூரணமாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பேன் எனினும் பொது மக்களுக்கு நான் ஒரு அழைப்பு விடுக்கின்றேன் சட்டத்தையும் ஒழுங்கையும்நடைமுறைப்படுத்துவதற்கு போலீசாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் தெரிவித்தார்
யாழ்ப்பாணம் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் அவர் தனது கடமைகளை இன்று திங்கட்கிழமை முற்பகல் 11.15 மணியளவில் பொறுப்பேற்றார்.
பொலிஸ் தலைமையக்கதில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு மையத்தின் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றினார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த ராஜித, பிரதமரின் பாதுகாப்புப் பிரிவுக்கு மாற்றலாகிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.