இலங்கை ஓட்ட வீராங்கனை விபத்தில் காயம்.

முச்சக்கர வண்டி விபத்தில் இலங்கை தடகள அணியின் தலைவியும் 800 மீற்றர் ஓட்டப் போட்டியின் தேசிய சம்பியனுமாகிய நிமாலி லியனாராச்சி காயமடைந்துள்ளார்.

பயிற்சிக்காக பயணித்துக் கொண்டிருந்தபோதே அவர் இவ்வாறு விபத்தில் சிக்கியுள்ளார்.

இதனையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

13ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் தடகள குழாத்துக்குத் தலைமை தாங்கும் நிலையில் விபத்தில் சிக்கியுள்ளார்.

குறித்த போட்டித் தொடரில் 800 மீற்றர், 1500 மீற்றர் மற்றும் 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டிகளிலும் நிமாலி கலந்துகொள்விருந்தார்.

கடந்த முறை நடைபெற்ற 12ஆவது தெற்காசிய விளையாட்டு விழாவில் நிமாலி தங்கப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்