காஷ்மீர் தீவிரவாதிகளின் முகாம் கண்டுபிடிப்பு – ஆயுதங்களும் மீட்பு.

காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் பதுங்குமிடத்தை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர் இயந்திர துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர், சோபோர் அருகாமையிலுள்ள ரபியாபாத் பகுதியில் பயங்கரவாதிகளின் இரகசிய பதுங்குமிடத்தை கண்டுபிடித்தனர்.

அங்கிருந்து இரு ஏ.கே.47 இயந்திர துப்பாக்கிகள், 2 ஆயிரம் தோட்டாக்கள், இரு வயர்லெஸ் (Wireless) கருவிகள் மற்றும் ஒரு செய்மதி (Satellite) தொலைபேசி ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Recommended For You

About the Author: ஈழவன்