மாலியில் இருந்து பிரான்சை வந்தடைந்த 13 இராணுவ வீரர்களின் உடல்கள்..!!

கடந்தவாரம் மாலி நாட்டில் விபத்தில் உயிரிழந்த 13 இராணுவ வீரர்களில் சடலங்கள் பிரான்சுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை இத்தகவலை பிரெஞ்சு இராணுவ பேச்சாளர் Frédéric Barbry தெரிவித்துள்ளார். ஆனால் இதுதொடர்பான மேலதிக விபரங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை.

நாளை டிசம்பர் 2 ஆம் திகதி திங்கட்கிழமை பரிசில் அவர்களுக்கான தேசிய அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சடலங்கள் அனுப்பட்டுவதற்கு முன்னர் Gao நகரில் வைத்து இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. பின்னர் பிரெஞ்சு தேசிய கொடி போர்த்தப்பட்ட சவப்பெட்டிகள் இராணுவ விமானம் மூலம் பிரான்சுக்கு கொண்டுவரப்பட்டன.


Recommended For You

About the Author: Editor