இணையத்தளங்களில் பாலியல் விளம்பரம்!

இலங்கையில் இணையத்தள மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக பெண்களை பாலியல் தேவைகளுக்காக விபச்சாரத்தில் ஈடுபடுத்தி மற்றும் பெண்களை விற்பனை செய்த மோசடியில் ஈடுபட்டு வந்த கும்பல் தொடர்பில் தகவல்கள் வெளிவந்துள்ளன.

வலான ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த மோசடி கும்பலை மடக்கிப் பிடித்துள்ளனர்.

குறித்த விபச்சார நடவடிக்கையின் உரிமையாளரான சந்தேக நபர், கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி பாலியல் ரீதியான பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வந்துள்ளார். மேலும் இணையத்தளங்களில் விளம்பரம் செய்து வந்துள்ளார்.

சந்தேக நபர் எலகந்த பிரதேசத்தில் அழகு நிலையம் நடத்துவது போன்று செயற்பட்டு, குறித்த விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக பெண்ணொருவரை சுமார் 30 ஆயிரம் ரூபா வரையில் இவர் விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி கைது நடவடிக்கையின் போது, உரிமையாளர் உட்பட மேலும் இரண்டு பெண்கள் குறித்த இடத்தில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor