
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனரென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட இருதயபுரம், கறுவப்பங்கேணி, கூழாவடி, மாமாங்கம், புன்னைச்சோலை உட்பட பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதன் காரணமாக வெள்ள நீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை மட்டக்களப்பு மாநகரசபை முன்னெடுத்து வருகின்றது.
மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவனின் ஆலோசனைக்கு அமைவாக மாநகரசபை உறுப்பினர்கள், மாநகர ஆணையாளர் ஆகியோர் நேரடியாக பகுதிகளுக்கு சென்று வெள்ள நீரை வெளியேற்றும் வகையில் வடிகான்களை துப்புரவு செய்யும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.