சுவிஸ் தூதரக பெண் கடத்தப்பட்டமை ஒரு நாடகம்.

சுவிஸ் தூதரகத்தில் பணிபுரிந்த இலங்கை பெண் ஒருவர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் ஒரு நாடகமென அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மேலும் புதிய ஜனாதிபதியின் கீழ் இலங்கையை சர்வதேச அளவில் இழிவுபடுத்த முனையும் செயற்பாடாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சுவிஸ் தூதரக பெண் பணியாளர் கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ள விவகாரம் இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். விமல் வீரவன்ச மேலும் கூறியுள்ளதாவது, “கடத்தப்பட்ட பெண் இலங்கையிலுள்ள எந்த பொலிஸ் நிலையத்திலும் புகார் அளிக்கவில்லை.

இந்நிலையில் நாடகத்தின் இரண்டாம் பாகத்தை இலங்கையிலுள்ள சுவிஸ் தூதரகம் நடிக்கிறது.

இதேவேளை எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், வெள்ளை வான் அச்சத்தை உருவாக்கியுள்ளனர்” என குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்