ஊழல்வாதிகளை ஆளுநர் காப்பற்றுவதாக கணேஷ் வேலாயுதம் குற்றசாட்டு

இரணைமடு குளத்தினால் கடந்த 2018ம் ஆண்டு உண்டான அனா்த்தம் தொடா்பாக நடாத்தப்பட்ட விசாரணை குழு அறிக்கையினை வெளியிடாமல் மறைத்து வைத்திருக்கும் ஆளுநா் ஊழல் அதிகாாிகளை தண்டிப்பேன் என கூறுவது வேடிக்கையான ஒரு கருத்தாகும் என மக்கள் முன்னேற்ற கூட்டணியின் தலைவா் கணேஷ் வேலாயுதம் தெரிவித்தார்.
 
 யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளா் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தொிவிக்கும்போதே  மேற்கண்டவாறு கூறியுள்ளாா்.

இதன்போது மேலும் அவா் கூறுகையில், கடந்த 6ம் திகதி யாழ்.ஊடக அமையத்தில் ஊடகவியலாளா் சந்திப்பு ஒன்றை நடாத்தில் இரணைமடு அனா்த்தம் தொடா்பிலான ஆய்வு அறிக்கையை வெளியிடவேண்டும் என கேட்டிருந்தோம்.

அதன் பின்னா் சில ஊடகங்களுக்கு கருத்து கூறிய ஆளுநா் சுரேன் ராகவன், ஒருவார காலத்திற்குள் அந்த அறிக்கையை வெளியிடுவேன் என கூறினாா். ஆனால் ஒருவாரம், இருவாரம் கடந்தும் அறிக்கை வெளியாகவில்லை.

அண்மையில் ஊழலுக்கு எதிரான அதிகாாிகள் கலந்து கொண்ட சந்திப்பில் ஊழல் செய்தவா்கள் எவராக இருந்தாலும் அவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பேன் என கூறிய ஆளுநா் அந்த அறிக்கையை வெளியிடாமல் வைத்திருப்பது வேடிக்கை.

நாங்கள் அறிந்தளவில் சுமாா் 400 கோடிக்கும் மேல் ஊழல் இடம்பெற்றிருப்பதாகவும், அதனுடன் சம்மந்தப்பட்ட அதிகாாிக ளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஆனால் அதிகாாிகளுக்கான இடமாற்றம் ஊழலுக்கான தண் டணை அல்ல. அவா்களுக்கு ஊழலுக்கான தண்டணை வழங்கப்படவேண்டும். சுரண்டிய மக்களின் பணத்தை மீள பெற்று மக்களிடம் கொடுக்கவேண்டும்.

மேலும் இந்த விடயத்தில் சம்மந்தப்பட்டுள்ள அதிகாாி ஒருவா் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இதற்கிடையில் இரணைமடு அபிவிருத்திக்கு ஒப்பான திட்டம் முல்லைத்தீவிலும் வரவுள்ளது.

அங்கும் அந்த அதிகாாி இதைதான் செய்வாா். மேலும் இந்த விடயத்தில் தமிழ் அரசியல்வாதிகள் வாய் மூடி மௌனிகளாக இருந்து கொண்டிருக்கின்றாா்கள். அவா்கள் இரணைமடு அறிக்கை எங்கே? அதனை ஏன் வெளியிடவில்லை? என கேட்க தயாராக இல்லை. மாறாக ஊழலுடன் சம்மந்தப்பட்ட அதிகாாிகளுடன் பிாியாவிடை நிகழ்வுகளில் அவா்கள் கலந்து கொள்கின்றாா்கள். எனவே இந்த அறிக்கையை ஆளுநா் உடனடியாக வெளியிடவேண்டும்.

இல்லையேல் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட சிங்கள முற்போக்கு அரசியல்வாதிகளின் ஒத்துழைப்புடன் இந்த விடயத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு செல்ல நாங்கள் முயற்சிப்போம் என்றாா்.  


Recommended For You

About the Author: ஈழவன்