சீரற்ற வானிலை – நால்வர் உயிரிழப்பு: 2255 பேர் பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி இதுவரை நால்வர் உயிரிழந்துள்ளனர். அத்தோடு 643 குடும்பங்களைச் சேர்ந்த 2255 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த அனர்த்தங்கள் காரணமாக இதுவரை நால்வர் படுகாயமடைந்துள்ளனர். அனர்த்தம் காரணமாக 2 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 57 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை நுவரெலியா, மலபத்தவ பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

குறிப்பாக வடக்கு, வடமேல், மேல், சப்ரகமுவ மத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சில இடங்களில் 100-150 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.


Recommended For You

About the Author: ஈழவன்