27 கிலோ மீட்டர் நடந்து வந்து வேலைபார்த்த பெண் ஊழியருக்கு கிடைத்த பரிசு!

அமெரிக்காவில் நாள் தோறும் 27 கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து ஓட்டலில் வேலைபார்த்த பெண் ஊழியருக்கு வாடிக்கையாளர்கள் இருவர் புதிய காரை பரிசாக அளித்துள்ளனர்.

டெக்சாஸ் மாகாணம் கால்வெஸ்டனிலுள்ள ஓட்டலில் பணிபுரிபவர் அட்ரியானா எட்வர்ட்ஸ். தனது வீட்டில் இருந்து நாள்தோறும் 22 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்து வந்து ஓட்டலில் பணியாற்றினார்.

இந்நிலையில், ஓட்டலில் உணவருந்த 2 பேர், கார் வாங்க அட்ரியானா பணம் சேமிப்பதை தெரிந்து கொண்டனர். பின்னர் அருகிலுள்ள விற்பனை நிலையத்துக்கு சென்று நிசான் சென்ட்ரா காரை (Nissan Sentra) வாங்கி பரிசாக அளித்தனர்.


Recommended For You

About the Author: Editor