ஹெரோயின் வைத்திருந்தவர்கள் விளக்கமறியலில்.

ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் தென்பகுதியை சேர்ந்த இருவர் உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , அவர்களிடமிருந்து 7 கிராம் போதைப்பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

யாழ்.குருநகர் பகுதியில் ஹெரோயின் போதை பொருளை பாவனைக்கு உட்படுத்துகிறார்கள் என யாழ்ப்பாண பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் போதை பொருளை பாவனைக்கு உட்படுத்திய நிலையில் மூவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிராம் போதைப்பொருளையும் மீட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட தீவிர விசாரணையின் போது , அவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரம் யாழ்.புகையிரத நிலையத்திற்கு அருகில் வைத்து தென்னிலங்கையை சேர்ந்த இருவரை பொலிசார் கைது செய்தனர். அதில் ஒருவரிடமிருந்து 5 கிராம் ஹெரோயினும், மற்றவரிடமிருந்து 1 கிராமும் மீட்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட ஐவரையும் , அவர்களிடமிருந்து மீட்கப்பட்ட 7 கிராம் ஹீரோயினையும் பொலிசார் நீதிமன்றில் பாரப்படுத்தினர். அதனை அடுத்து நடைபெற்ற விசாரணைகளின் பின்னர் ஐவரையும் எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதிவான் உத்தரவிட்டார்.

Recommended For You

About the Author: ஈழவன்