
வட கிழக்குப் பருவப் பெயர்ச்சி மழை காலநிலை உருவாகியுள்ளதால் வடக்கு – கிழக்கில் அடுத்துவரும் சில தினங்களில் 75 தொடக்கம் 150 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி ஏற்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாடுமுழுவதும் கடந்த 27ஆம் திகதி முதல் வடகிழக்கு பருவப் பெயர்ச்சி மழை உருவாகியுள்ளது. இதனால் நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் அடுத்துவரும் நாள்களில் இந்த மாகாணங்களில் 75 தொடக்கம் 150 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி ஏற்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளார்.
மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ஏற்படும் இயற்கை இடர்களிலிருந்து பாதுகாப்பாக இருக்க முன் ஏற்பாடுகளுடன் இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கேட்டுள்ளது.