கட்சி தலைவர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அழைப்பு

அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அழைப்பு விடுத்துள்ளார்.

எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 10 மணிக்கு கட்சிகளின் தலைவர்களை வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதன்போது நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அத்தோடு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களின் கட்டுப்பணம் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்