
ஈரானுக்கு எதிராக புதிய தடைகளை விதிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அறியாமைத் தனமான அவமதிப்புக்கு உள்ளாக்கும் அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த தடைகளை விதிக்கவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி மனநலம் குன்றியவர் என ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்திருந்தார்.
ஈரான் தலைவர்கள் யதார்த்தத்தை புரிந்துக் கொள்ளவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் சிலரை இலக்கு வைத்தே இந்த தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,
அமெரிக்கா மீதான விரோதமான செயற்பாடுகளின் பின்னணியில் ஈரானின் ஆன்மிகத் தலைவர் ஆயதுல்லாஹ் கொமெய்னி உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.