இலங்கையை தனிமைப்படுத்த அரசு முயற்சி- அகிலவிராஜ்!!

வெளிவிவகார ரீதியில் இலங்கையை மீண்டும் தனிமைப்படுத்தும் செயற்பாடுகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக முன்னாள் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

சிறிகொத்தவில் நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அகிலவிராஜ் காரியவசம் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாகக் கூறியமையாலேயே மக்கள் பொதுஜன பெரமுனவுக்கு வாக்களித்தனர்.

ஆனால், இவர்கள் ஆட்சிபூடம் ஏறியவுடனே, எந்தவொரு நாடுகளிலும் இல்லாதளவு வெளிநாட்டுத் தூதரங்கள் மீது கையை வைக்கும் முயற்சிகளை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.

அதாவது, வெளிநாட்டுத் தூதரகமொன்றின் பெண் பணியாளர் ஒருவர், கடத்திச் செல்லப்பட்டு அச்சுறுத்தப்பட்டுள்ளார்.

தூதரக அதிகாரிக்கே இந்த நிலைமையென்றால் சாதாரண மக்களுக்கு என்ன நிலைமையென்பது எதிர்காலத்தில் தெரியவரும்.

அத்துடன் சுவிட்ஸலாந்து தூதரகப் பணிகள் இனியும் இலங்கையில் தொடருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மஹிந்தவின் கடந்த ஆட்சியில், சர்வதேச ஒத்துழைப்புகள் இல்லாமல் இலங்கை தனிமைப்படுத்தப்பட்ட நிலைமை மீண்டும் உருவாகும் வகையில் இந்த செயற்பாடு அமைந்துள்ளது.

இதேவேளை ஆரம்பத்தில் நல்ல மாற்றங்களைச் செய்வது போன்று விம்பத்தைக் காண்பித்து விட்டு, மீண்டும் பழைய செயற்பாடுகளை  ஆரம்பித்துள்ளனர்.

இதனால் இனிவரும் நாட்களில் நாட்டில் எந்தவொரு புலனாய்வுப் பிரிவு அதிகாரியும் அரசாங்கத்துக்கு எதிரான விசாரணைகளை செய்வதற்கு முன்வரமாட்டார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor