முஸ்லீம் அமைச்சர்கள் சிலரை கைதுசெய்ய வலியுறுத்து!!

முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியூதீன் மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா ஆகியோரை கைது செய்யுமாறு ராவணா பலய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்த அமைப்பின் இணைப்பாளரான இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் மேற்படி தெரிவித்தார்.

இதேவேளை இங்கு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினரான அத்துரலியே ரத்தன தேரர், குருநாகல் வைத்தியசாலையில் சர்ச்சையை ஏற்படுத்திய மருத்துவர் ஷாபி விவகாரம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்ட சவூதி அரேபியப் பல்கலைக்கழகம் குறித்து சுயாதீன ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதனால் மீண்டும் நீதியான விசாரணை நடைபெறும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


Recommended For You

About the Author: Editor