ஐ.நாவின் விசேட குழு பாதுகாப்பு செயலாளரை சந்தித்தது!

ஐக்கிய நாடுகளின் போதை மற்றும் குற்றங்கள் தொடர்பான அதிகாரிகளுக்கும், பாதுகாப்பு செயலாளர் கமல் குணரட்னவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மிவா காட்டோ என்ற அதிகாரியின் தலைமையில் நான்கு பேரைக்கொண்ட குழுவினர் சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.

இலங்கையின் போதைப்பொருள் ஒழிப்புக்கான பயிற்சிகள் மற்றும் வலுவூட்டல் என்பன குறித்து இதன்போது பேசப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

ஐக்கிய நாடுகளின் யூஎன்ஓடிசி அமைப்பு அங்கத்துவ நாடுகளுக்கு மத்தியில் பயிற்சிகள் மற்றும் கடத்தல்கள் என்பவற்றை குறைப்பதற்கான திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இதன் ஒரு பகுதியாகவே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor