இத்தாலியில் சுற்றிவளைப்பு – ஆயுதங்கள் மீட்பு.

இத்தாலியில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றுவளைப்பு நடவடிக்கையின் போது ஆயுதங்கள் சில கைப்பற்றப்பட்டுள்ளன.

நாஸி மற்றும் பாசிச கொள்கை கொண்டவர்களிடம் இருந்தே இவ்வாறு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இரண்டாவது உலகப்போரின் முக்கிய காரணியாக இருந்தவர்கள் ஹிட்லர் மற்றும் முசோலினி.

நாஸிஸம் மற்றும் பாசிசம் கொள்கையைக் கொண்ட இவர்களின் தத்துவத்தை பின்பற்றி வரும் சிலரிடம் ஆயுதங்கள் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து மிலன் நகரின் பல்வேறு இடங்களில் பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது எம்16, ஏ.கே. 47, ஸ்னைப்பர் ரக துப்பாக்கிகள், ஏராளமான கைத்துப்பாக்கிகள், வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்